search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினோத பூஜை"

    • பெரிய கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழிகள் பலியிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
    • குதிரை வாகனத்தில் வந்த பூசாரி கத்தி மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள பெரிய கருப்பசாமி கோவிலில் ஆடி அமாவாசையை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    விழாவில் கும்பளபாடி குண்டத்து மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் நடப்பண அள்ளிமுத்து மாரியம்மன், ஊர் மாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த அழைப்பின்போது பெண்கள் மாவிளக்கு ஊர்வலம் சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து பெரிய கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழிகள் பலியிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

    பின்னர் மிளகாய் யாகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் வந்த பூசாரி கத்தி மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

    மேலும் பக்தர்கள் குடும்பங்களில் தீ வினைகள் அகலவும், துன்பம் தீரவும் வெற்றுடலில் இடுப்பில் ஒரு வேட்டியை மட்டும் கட்டி கொண்டு, கரைத்து வைக்கப்பட்டிருந்த 108 கிலோ மிளகாய் கூட்டு கரைசலில் பூசாரி கோவிந்தன் குளித்து பக்தர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் கருப்ப சாமியிடம் வேண்டி வினோத வழிபாடு செய்தார்.

    இந்த வினோத வழிபாடு கோவிலுக்கு வந்த பக்தர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிளகாய் கூட்டு கரைசல் வழிபாடு மற்றும் மிளகாய் யாகத்திற்காக அனைவரும் மிளகாய் கொண்டு வந்து கோவிலில் வழங்கி வேண்டுதல்கள் நிறைவேற கருப்பசாமியை வழிபட்டு சென்றனர்.

    ×